நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
வீட்டின் வளம் பெருக.. இழந்த பணம், நகை மீண்டும் கிடைக்க.. தென்னை மர பரிகாரம்...!!
தென்னை மர பரிகாரம்..!!

🌴 வேகமாக முன்னேறி வரும் இன்றைய காலக்கட்டத்தில் பணம், பொருள் எல்லாம் சேர்ப்பதே பெரும்பாடாக உள்ளது. அப்படி பாடுபட்டு சேர்த்த பணத்தையோ, பொருளையோ இழந்து விட்டால் அதனால் அடையும் துன்பத்திற்கு அளவேயில்லை.
🌴 யாரையாவது நம்பி பணமோ, பொருளோ ஏதோ ஒன்றை கொடுத்து அவர்கள் அதை திருப்பி தராமல் இழந்திருந்தாலும், இல்லை வேறு எதிலாவது முதலீடு செய்து அந்த பணம் நமக்கு நஷ்டமாகி இருந்தாலும், நமக்கு வர வேண்டிய சொத்துக்கள் வராமல் போயிருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யும் போது நிச்சயமாக இழந்தவை அனைத்தும் நமக்கு திரும்ப கிடைக்கும்.
🌴 இப்படி இழந்தவைகளை எல்லாம் திரும்ப தரும் இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பரிகாரம் செய்யும் முறை :
🌴 இந்த பரிகாரத்திற்கு தேவையான ஒன்று தென்னை மரம். இதற்கு இரண்டு தென்னை மரங்கள் ஒன்றாக இருக்கும்படி தேர்வு செய்து கொள்ளுங்கள்.
🌴 பொதுவாக தென்னை மரங்களை ஒன்றோடொன்று ஒட்டி வைக்க மாட்டார்கள். ஏனென்றால் தென்னை ஓலைகள் பெரிய அளவில் வளரக்கூடியது மற்றும் ஒன்றோடொன்று ஒட்டியபடி வைக்கும் போது அதன் வளர்ச்சி தடைபடும் என்பதற்காக ஒரு மரத்திற்கும் அடுத்த மரத்திற்கும் பெரிய அளவில் இடைவெளி விட்டு தான் வைப்பார்கள்.
🌴 ஆனால் இந்த பரிகாரத்திற்கான மரம் நமக்கு ஒன்றோடொன்று அதிகபட்சமாக 3 அடி இடைவெளியில் தான் இருக்க வேண்டும்.
🌴 அடுத்ததாக இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருள் மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறத்தில் உள்ள கயிறு. இது அரைஞாண் கயிறாகவும் இருக்கலாம் அல்லது பம்பரம் சுற்றும் கயிறாகவும் இருக்கலாம்.
🌴 இந்த மூன்று நிறத்திலும் கொஞ்சம் பெரிய நீளமான கயிறாக எடுத்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கயிறை வைத்து இரண்டு மரத்தையும் சேர்த்து கட்ட வேண்டும். எனவே கயிறை சற்று பெரிய அளவில் வாங்கி கொள்ளுங்கள்.
🌴 பின் மூன்று நிற கயிற்றையும் பெண்களின் ஜடை பின்னுவதை போல் பின்னி கொள்ளுங்கள். அடுத்ததாக இரட்டை மரம் உள்ள இடத்திற்கு சென்று இரண்டு மரங்களையும் சேர்த்து மூன்று சுற்றுகள் சுற்றி முடிச்சுப்போட வேண்டும்.
🌴 இப்படி சுற்றும் போதும், முடிச்சுப்போடும் போதும் நீங்கள் எந்த பொருளை இழந்தீர்கள் என்பதை கூறி, அந்த பொருள் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதார குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டு முடிச்சுப்போட்டு விடுங்கள். பின் அங்கு கற்பூர தீபம் ஏற்றி வணங்குங்கள்.
🌴 இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து முயற்சிகளை தொடருங்கள். இறைவனின் அருளால் நீங்கள் இழந்த பொருள் உங்களுக்கு கிடைக்கும்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்
கள் https://goo.gl/KCGjpn
Reviewed by ambrish
on
October 30, 2022
Rating:

