கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

கேரளா ஸ்டைல் வெஜ் சொதி | Kerala Style Veg Stew Recipe In Tamil Uploading: 441124 of 441124 bytes uploaded.


 தேவையான பொருட்கள்:

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (கீறியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)

* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து, நறுக்கியது)

* பச்சை பட்டாணி - 1 கப்

* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

* நீர் போன்ற தேங்காய் பால் - 2 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* சர்க்கரை - 1 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 1 சிறிய துண்டு

* ஏலக்காய் - 2

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, பச்சை மிளகாயை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, நீர் போன்ற தேங்காய் பாலை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி தயார்.

கேரளா ஸ்டைல் வெஜ் சொதி கேரளா ஸ்டைல் வெஜ் சொதி Reviewed by ambrish on December 29, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app