இராமேஸ்வரம் கடல்
மாவட்டம் :இராமநாதபுரம்
இடம் :இராமேஸ்வரம்
முகவரி :பாம்பன் தீவு, இராமேஸ்வரம், இராமநாதபுரம்
தாலுகா :இராமேஸ்வரம்
இராமேஸ்வரம் கடற்கரை இந்தியாவின் தென்கிழக்கு முனையான இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் இந்துகள் புனித யாத்திரை செல்லும் முக்கிய இடங்களில் ஒன்று.
இராமேஸ்வரம் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் ஆழமில்லாமல் இருப்பதால் நீந்துவதற்கும், குளிப்பதற்கும் ஏதுவாக உள்ளது. இவ்விடத்தில் கடற்கரையைச் சுற்றிலும் மதச்சடங்குகள் நடைபெறுகின்றன. இந்த கடற்கரையை ஒட்டியுள்ள ராமநாதர் கோவிலின் உள்ளே 21 தீர்த்தங்கள் இவ்விடத்தின் சிறப்பம்சமாகும்.
இராமநாதர் கோவில், பாம்பன் பாலம், கோதண்ட ராமர் கோயில், வில்லூண்டி தீர்த்தம் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இவ்விடம் நீந்துவதற்கும், சூரியக் குளியல் எடுப்பதற்கும் மிகச்சிறந்த இடமாகும்.
Reviewed by ambrish
on
October 29, 2022
Rating:
