இலங்கையை பார்க்க... மனோரா கோட்டை...!!


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


இலங்கையை பார்க்க... மனோரா கோட்டை...!!


எழில்மிகு மனோரா, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வங்கக் கடலோரம் தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது.


சிறப்புகள் :


இது தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் கி.பி. 1814ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவர் மாவீரன் நெப்போலியனுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரில் ஆங்கிலேயர்கள் பெற்ற வெற்றியின் நினைவாக இந்த மனோராவை உருவாக்கினார்.


அறுங்கோண வடிவத்துடன் 8 அடுக்குகளை கொண்ட இந்தக் கோபுரத்தின் உயரம் 120 அடி ஆகும். இதன் உச்சியை அடைய 120 படிகள் உள்ளன.


இங்கு வளைந்த மேற்பகுதியுடன் கூடிய ஜன்னல்கள், வட்டமாய் சுற்றி ஏறும் மாடிப்படி, ஒரு தளத்துக்கும் மறு தளத்துக்குமிடையே தாழ்வாரம் ஆகியவை உண்டு.


வாயிலினுள் செல்லும்போதே துப்பாக்கி வைப்பதற்கான அறைகள், போர்க்கருவிகள் வைப்பதற்கான அறைகள், வெடிமருந்து கிடங்குகள், வீரர்கள் தங்குவதற்கான அறைகள் முதலியன உள்ளன.


கோட்டை போல் காணப்படும் மனோரா கோபுரத்தை சுற்றி மதிலும், அகழியும் காணப்படுகிறது. 


மனோராவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மராட்டி, உருது ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுகள் உள்ளன.


தமிழகத்தின் தொழில்நுட்பம், ஆங்கிலேயரின் கலை வடிவம் ஆகிய இரண்டும் இணைந்துள்ள நினைவுச்சின்னம் இது.


இங்கு பழங்கால மரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாயில் தூண்களின் ஒருபுறம் ஆங்கில கம்பெனியரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.


இங்கிருந்து இலங்கையை பார்க்க முடியும் என்றும், இங்குள்ள சுரங்கப்பாதைகளில் மன்னரால் புதையல் பதுக்கப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகின்றன.


மராட்டியரின் ஆட்சிக் காலத்தில் மனோரா, துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியுள்ளது.


பார்க்க வேண்டிய இடங்கள் : 


கலங்கரை விளக்கம்...

கடலில் படகு சவாரி...


இயற்கை காற்று...

மீன்பிடித் துறைமுகம்...

சிறுவர் விளையாட்டு பூங்கா...


எப்படி செல்வது?


🚕 பட்டுக்கோட்டையில் இருந்து மல்லிபட்டினம் வழியாக பேருந்து வசதி உள்ளது.


🚕 திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டை வந்து அங்கிருந்து அதிராம்பட்டினம் வழியாக மனோரா செல்லலாம். பேராவூரணியில் இருந்து 15கி.மீ. தூரத்திலும், பட்டுக்கோட்டையில் இருந்து 21கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.


பார்வை நேரம் : 


மனோரா பார்வை நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை. விடுமுறை நாட்களிலோ மற்ற நாட்களிலோ மதியத்திற்கு பிறகு அங்கு செல்லலாம்.






 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

இலங்கையை பார்க்க... மனோரா கோட்டை...!! இலங்கையை பார்க்க... மனோரா கோட்டை...!! Reviewed by ambrish on October 29, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app