நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
அழகான ஆற்றங்கரை பகுதியில்... புனித டேவிட் கோட்டை..!

🏦 பாண்டிச்சேரியிலிருந்து ஏறத்தாழ 25கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து ஏறத்தாழ 48கி.மீ தொலைவிலும், கடலூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ள அழகிய வரலாற்று சிறப்புமிக்க கோட்டை தான் புனித டேவிட் கோட்டை ஆகும்.
சிறப்புகள் :
🏦 இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாக திகழும் புனிதடேவிட் கோட்டை கடலூரின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இக்கோட்டை வரலாற்றுப் பொக்கிஷமாகவும், கலாச்சார அடையாளமாகவும் திகழ்கின்றன.
🏦 இந்தக் கோட்டை கெடிலம் என்ற ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
🏦 டேவிட் கோட்டையின் ஒரு வியப்பான அதிசயம் என்னவென்றால் ஒருவரால் கட்டப்பட்ட சிறிய கோட்டை இதுவாகும்.

🏦 கடல் மற்றும் ஆற்றங்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பார்ப்பதற்கு இந்தக் கோட்டை அழகாக காட்சியளிக்கும். சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் இந்தக் கோட்டை விளங்குகின்றன.
🏦 பிறகு இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் சில்வர் பீச் என்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு குதிரையேற்றம் மற்றும் படகு சவாரிகளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செல்லலாம். மேலும் நம் மனதை கவரும் வகையில் படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன.
எப்படி செல்வது?
🏦 கடலூரில் இருந்து பேருந்துகள் மூலம் செல்லலாம்.
எப்போது செல்வது?
🏦 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
🏦 கடலூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
🏦 சில்வர் பீச்.
🏦 பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்.
🏦 பாடலீஸ்வரர் கோவில்.
🏦 கடற்கரை துறைமுகம்.

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP
Reviewed by ambrish
on
October 29, 2022
Rating:
