கீழே கிடக்கும் காசை எடுத்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                கீழே கிடக்கும் காசை எடுத்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!

                கீழே கிடக்கும் காசை எடுக்கலாமா? எடுக்கக்கூடாதா?


சில சமயங்களில் வீதியில் நாம் நடந்து செல்லும் போது நமக்கு கீழே காசு கிடக்கும். அப்படி கிடக்கும் அடுத்தவர்களின் பணத்தை எடுக்கும் பொழுது அனைவருக்குமே மனதில் சிறிய தடுமாற்றம் இருக்கும். அடுத்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை நாம் எடுப்பதால் அவர்கள் என்னவெல்லாம் நமக்கு சாபம் விடுவார்கள் என்ற பயம் மட்டும் எப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.


அந்த காசை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். சில பேர் அந்த காசை மிகவும் அதிசயமாக கடவுள் கொடுத்த காசு என்று கூட சொல்வார்கள். இந்த காசை எடுப்பதன் மூலம், அதாவது அடுத்தவர்களுடைய பொருளை எடுப்பதன் மூலம் நமக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட குழப்பத்திற்கு உண்டான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.


நாம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உழைப்பது போல் தான் மற்றவர்களும் உழைப்பார்கள் என்ற மனநிலை நமக்கு இயல்பாகவே வந்துவிடும். ஒரு ரூபாயாக இருந்தால் என்ன? பத்து ரூபாயாக இருந்தால் என்ன? அதை நாம் கைகளால் எடுத்துவிட்டால், அடுத்தவர்கள் பொருளை அபகரித்ததற்கு சமம் தான்.


சிலருக்கு அந்த நாணயத்தின் மூலம் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. கீழே கிடந்து நாம் எடுக்கும் பணம் நமக்கு அதிர்ஷ்டத்தை தான் தரும். நமக்கு அதிர்ஷ்டகரமான நேரத்தில் தான் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் செல்வ நாணயங்கள் பூமாதேவியின் மூலமாக நமக்கு கிடைக்கின்றன.


பணத்திற்கோ, நாணயத்திற்கோ எந்தவிதமான தீட்டுகளும் கிடையாது. கீழே கிடக்கும் பணம் அல்லது நாணயத்தினை எடுப்பதற்கு எந்த தயக்கமும் படவேண்டிய அவசியம் இல்லை. 


எனவே எந்த சூழ்நிலையில் எடுத்த நாணயமாக இருந்தாலும் முதலில் மஞ்சள் தண்ணீரில் கழுவி சுத்தமாக துடைத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது வீட்டில் வேறு ஏதாவது இடத்திலோ பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம். 


கீழே இருந்து நீங்கள் எவ்வளவு பணத்தை எடுத்தீர்களோ, அதற்கு பதிலாக உங்களிடம் உள்ள பணத்தை கோவில் உண்டியலில் சேர்க்கலாம். சிறிய தொகையாக இருந்தால் இவற்றை செய்யலாம்.


அதே ஒரு பெரிய தொகையாக இருந்தால், அதாவது 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கூட கீழே கிடக்கலாம். அவ்வாறு கிடக்கும் பட்சத்தில் நம் கஷ்டத்திற்கு காசு கிடைத்து விட்டது என்று நாம் எடுத்து கொள்வோம். ஆனால், இப்படி அடுத்தவர்களுடைய பணம் கைக்கு கிடைக்கும் போது அதை நம்முடைய தேவைக்காக பயன்படுத்தி கொள்ளக்கூடாது.


இந்த காசை அவர்கள் எந்த சூழ்நிலையில் தொலைத்து இருப்பார்களோ? அவர்களுடைய கஷ்டம் இந்த காசை நாம் பயன்படுத்தும் போது நமக்கு வந்து சேர்ந்து விடும். முடிந்த வரை அந்த பணத்தை யார் தொலைத்தார்கள் என்று அக்கம்பக்கத்தில் விசாரித்து திருப்பி கொடுப்பது நல்லது.


திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் கிடைக்கின்ற பணத்தை கோவில் உண்டியலில் செலுத்துபவர்களாக இருந்தால் அதை கோவிலில் செலுத்திவிடலாம் அல்லது ஆசிரமங்கள் போன்ற இடங்களுக்கு அந்த பணத்தை தானமாக கொடுத்து விடலாம்.


நீங்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் பொழுது இப்படி கீழே கிடந்த பணத்தை பயன்படுத்தி கொண்டீர்கள் என்றாலும், உங்களிடம் பணம் இருக்கும் பொழுது எவ்வளவு பணத்தை கீழே இருந்து எடுத்தீர்களோ அந்த தொகையை தானமாக கொடுத்து விட வேண்டும். அடுத்தவர்களுடைய பாவத்தை ஒருபோதும் நாம் சேர்த்து கொள்ளக்கூடாது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

கீழே கிடக்கும் காசை எடுத்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!! கீழே கிடக்கும் காசை எடுத்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!! Reviewed by ambrish on October 30, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app