நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
🎊ஆயுத பூஜை🔧.. சரஸ்வதி பூஜை📘.. வீட்டில் வழிபடும் முறை🙏...!!
ஆயுத பூஜை..!!

மக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாகவும் நவமி திதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இத்தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்த தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது 'ஆயுத பூஜை" என்றும், 'மஹாநவமி" என்றும் அழைக்கப்படுகிறது.
வழிபடும் முறை :
அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும்.
அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.
தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.
சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.
பூஜையின் போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.
ஆயுத பூஜையின் சிறப்பு :
செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.
சரஸ்வதி பூஜை..!!
கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாக கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.
வழிபடும் முறை :
ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.
படத்திற்கு அருகம்புல், மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும்.
மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய் தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
மறுநாள் காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும்.
மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.
சரஸ்வதி பூஜையின் சிறப்பு :
நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள் பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn
Reviewed by ambrish
on
October 30, 2022
Rating:
